நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் ஒருவர் பலி!

நெதர்லாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதல் பலியாக 86 வயது முதியவர் நேற்று வெள்ளிக்கிழமை  உயிரிழந்துள்ளார்.


 ரோட்டர்டாம் நகரில் உள்ள இகாசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என என நெதர்லாந்தின்  பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

 நெதர்லாந்தில் வியாழக்கிழமை, உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 38 லிருந்து 82 ஆக உயர்ந்துள்ளது..

🔴பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர்.   இவர்களில் ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 138 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது.  ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்படுவது இதுவே முதன் முறை.

 🔴சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3012 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 30 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3042 ஆக உயர்ந்துள்ளது. நேற்று உயிரிழந்த 30 பேரில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.



Blogger இயக்குவது.