சுவிட்சர்லாந்தில் கொரோனவால் தமிழர் ஒருவர் மரணம்

சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி யாழ் புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்து செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் வசித்து வந்தவர் ஒரு வாரத்துக்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்துள்ளார்

இந்நிலையில் அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்பு கொண்ட போது வைத்தியர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்தி வீட்டிலேயை 14 நாட்கள் தனிமைப்படுத்துமாறு தெரிவித்திருக்கின்றனர்

தனிமையில் வசித்துவந்தவர் இன்று மாலை ஆகியும் அவருடைய அறையில் எந்தவொரு சலனமின்றி இருந்ததனால் பக்கத்து அறையில் அறையில் இருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து விரைந்து வந்த பொலிஸாரும் வைத்தியப் பிரிவினரும் அவர் இறந்து விட்டதாக அறிவித்து அவரது சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
Powered by Blogger.