ஒலிம்பிக் இந்த ஆண்டின் இறுதி வரை ஒத்திவைக்கப்படலாம்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டின் இறுதிப் பகுதி வரை ஒத்தி வைக்கப்படலாம் என்று ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஜப்பானின் பாராளுமன்றில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜப்பானின் ஒலிம்பிக் போட்டிகள் விவகாரங்களுக்கான அமைச்சர் சீகோ ஹாஷிமோடோ சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் ஜப்பான் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி 2020 க்குள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2020 ஆம் ஆண்டுக்கான டோகியோ ஒலிம்பிக் போட்டிகளானது எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வடை நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் திட்டமிட்ட திகதியில் போட்டிகளை நடத்த தம்மாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இந்த நிகழ்வை திட்டமிட்டப்படி நடத்துவதற்கு முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடந்த வாரம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தோமஸ் பேச் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
Powered by Blogger.