யாருக்கும் அஞ்சேல்: இரு சகோதரிகளின் கதை!
“புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற தலைப்புகளின் மூலமே சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. அவர் தற்போது பிந்து மாதவி, தர்ஷனா பானிக் ஆகியோரை லீட் கேரக்டர்களில் வைத்து இயக்கி வரும் திரில்லர் படத்திற்கு “யாருக்கும் அஞ்சேல்” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை சிலம்பரசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.
படத்தின் தலைப்பு குறித்தும், கதை குறித்தும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் பேசியபோது “இந்தப்படத்தில் மிக கடினமாக இருந்தது தலைப்பு வைக்கும் பணி தான். பல விதமான தலைப்புகளை அலசி, இறுதியாக யாருக்கும் அஞ்சேல் எனும் இத்தலைப்பை தேர்ந்தெடுத்தோம். ரசிகர்கள் முழுப்படத்தினையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்பு தான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை அன்பிற்காக நடிகர் சிலம்பரசனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரண்டு சகோதரிகள் தங்களுடைய நிலத்தை விற்க சொந்த ஊருக்குப் பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும், தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
த்ரில்லர், உளவியல் இவை இரண்டையும் தனது முதல் படமான புரியாத புதிரில் மிகக் கச்சிதமாக அணுகி வெற்றி பெற்றவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கொஞ்சம் சறுக்கினாலும், அடுத்த படத்தில் மீண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையை புரியாத புதிர் படத்தின் மேக்கிங் கொடுத்திருந்தது. இந்நிலையில் மீண்டும் திரில்லர் வகையறாவுக்குள் ரஞ்சித் ஜெயக்கொடி நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு வித நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.
-சிவா
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo