நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?
தெருவில் நடந்து செல்லும்போது பச்சையாக ஏதோ கிடந்தது. எடுத்து நக்கிப் பார்த்தேன். புளிப்பாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது அது எருமைச்சாணி என்று. நல்லவேளை நான் மிதிக்கவில்லை.
இப்படித்தான் சிலர் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து தாங்கள் ஏதோ நல்லவர்கள் போல் முட்டாள்தனமாக காட்டிக் கொள்கிறார்கள்.
வரலாற்றை திரும்பிப் பார்ப்பது என்பது நாம் முன்னோக்கி சரியாக செல்வதற்கு உதவ வேண்டும். அதாவது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவ வேண்டும்.
மாறாக எதிரிக்கு காட்டிக் கொடுப்பதாகவோ உதவுவதாகவோ இருந்துவிடக்கூடாது.
உதாரணமாக, சுமந்திரன் புலிகள் சகோதரப் படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் முஸ்லிம் இனப்படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் தமிழ் மக்களை கொன்றார்கள் என்கிறார். இவற்றை எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் என்கிறார்.
இப்போது புலிகள் இல்லை. இல்லாத புலிகள் மீது இப்படி கூறுவதன்மூலம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடியும் என சுமந்திரன் கருதுகிறார்?
நிச்சயமாக இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இது தாங்கள் செய்த இனப்படுகொலையை நியாயப்படுத்தவே இலங்கை அரசுக்கு உதவுகிறது.
அதேபோல் சம்பந்தா ஐயாவும் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் தான் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.
இவ்வாறு கூறியதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடிந்தது?
மாறாக, இதனை தமிழ் செல்வனுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கிக்கொண்டு திரிந்தபோது கூறியிருக்கலாமே?
புலிகள் இருந்தபோது அவர்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றுகூறி பதவி பெறுவது. அவர்கள் இல்லை என்றவுடன் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கை அரசிடம் பதவியும் சலுகைகளும் பெறுவது
இவ்வாறு தங்கள் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பார்ப்பது தவறு மாறாக இனியாவது தமிழ் மக்களின் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பாருங்கள்.
-தோ.பாலா -