தற்காலிக விடைபெறல்!!


தொலைபேசியின் தொடுதிரைகளிலிருந்தும்..
கணினிகளின் கண்காணிப்புக்களிலிருந்தும்..
அலைவரிசைகளின் ஆரவாரத்திலிருந்தும்..


தற்காலிகமாக என்றாலும் விடைபெற்றுக் கொள்கிறேன்..

எனக்கான நிமிடங்களை. நீங்கள் சிறைவைத்திருந்தீர்கள். என் சிறைக்காலம் முடிந்து விட்டது.
விடுதலை தாருங்கள்.

இது அதிர்வுகள் பட்டு அண்டிப்போன செவிகள்.
இனிமேல்தான் பறவைகளின் ஓசை கொண்டு கிண்ட வேண்டும்..

விழியே! நீ பயமின்றி விழித்துக் கொள். உன் விம்பத்தில் இனி கிறுக்கல் விழாது. ஆனந்தமான காட்சிகளை உனக்கு அருளப் போகிறேன்..

பாதங்களே செருப்பினை கழற்றி விடுங்கள். சேற்றில் புதையவும் புல்லில் மிதக்கவும் பாதுகாப்புத் தேவையில்லை..

"ஹலோ" என்ற சொல்லை, நாக்கே! நீ நசுக்கி முழுங்கிவிடு. இனி நீ பேசுவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்காது..

என்னைத் தொலைக்கப் போகிறேன். என்னைத் துவைத்து இயற்கைக் கொடியில் காயப்போடப் போகிறேன்.

சற்றே பொறுத்திருங்கள். நான் உலர்ந்த பிறகு காற்று என்னை மீண்டும் இங்கு வீசி எறியலாம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.