இத்தாலியில் மலியும் மரணம் - ஒரு நகரில் மட்டும் 381 பேர் சாவு!

இத்தாலியின் தொற்றுநோயின் மையமான லோம்பார்டியின் வடக்குப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் சுமார் 381 ஆக அதிகரித்து 7,199 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த நகரில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸினால் 458 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மிலான் பிராந்தியத்தை உள்ளடக்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,047 ஆக அதிகரித்து 43,208 ஐ எட்டியுள்ளது என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இத்தாலியில் மோத்தமாக 837 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள அதேவேளை, மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 428 ஆகப் பதிவாகியுள்ளது. உலக நாடுகளில் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ள நாடாக இத்தாலி உள்ளதுடன் அங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.