திருகோணமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கண்காணிப்பில்!

திருகோணமலை கண்டி வீதியில் 5 ஆம் கட்டைப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.


நேற்று மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்ட ஐந்தாம் கட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞருக்கு கொவிட்19 நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டது.

இதை அடுத்து இளைஞரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து குறித்த இளைஞனின் குடும்பம் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.