விஜய் சேதுபதியின் புகை பிடிக்கும் போஸ்டருக்கு எதிர்ப்பு!!
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது பற்றிய எச்சரிக்கை வாசகங்களை திரைப்படம் ஆரம்பிக்கும் போதும், அப்படியான காட்சிகள் வரும் போது அவசியம் போட வேண்டும் என அரசு உத்தரவிட்டு அது இந்தியா முழுவதும் வெளியாகும் படங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால், சிகரெட் பிடிக்கும் காட்சி கொண்ட போஸ்டர்களை வெளியிடவும் அரசாங்கம் தடை விதிக்க வேண்டும். அப்படியான போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவுகின்றன.விஜய்சேதுபதி நடித்து வரும் தெலுங்குப் படமான 'உப்பென்னா' படத்தில் விஜய் சேதுபதியுன் போஸ்டரை பட நிறுவனம் இன்று(ஏப்.,1) வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி சிகரெட் பிடிக்கும் புகைப்படம் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.இம்மாதிரி போஸ்டர்கள் வெளியாகும் போது எதிர்ப்புகளும் அதிகமாக வருகின்றன. அந்த சர்ச்சைகளே படத்திற்கு இலவச விளம்பரமாக அமையும் என படக்குழுவினர் நினைக்கிறார்கள். அதிலும் தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமியால் மது, புகை போன்றவை எல்லாம் எடுக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு வரும் வேளையில் இப்படி ஒரு போஸ்டர் வௌியாகி இருப்பது சமூகவலைதளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.சமூகப் பொறுப்பு என்பது அனைத்து படக்குழுவினருக்கும் இருக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)