கொரோனா தீர்வு- அவசர ஒன்றுகூடலுக்கு ஆயத்தம் செய்யும் மகிந்த!!

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்திற்கு முகம் கொடுத்து கொடுத்துள்ள நிலையில் அப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், முக்கிய கூட்டமொன்றை நடத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.


இந்த விசேட கூட்டமொன்று நாளை (02) காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் இக்கூட்டத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கூட்டத்தில், கட்சித் தலைவர்களுக்கு அப்பால், ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, படைகளின் தளபதிகள் மற்றும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.