மேலும் இருவருக்கு யாழில் கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை இலங்கையில் கொரொனாதொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மத போதகருக்கு கொரோனா தொற்று உள்ளமை பரிசோதனையின் மூலம் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அந்த நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 10 பேரின் பரிசோதனை அறிக்கையில் கிடைத்துள்ள நிலையில் மூவருக்கு கொரோனோ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த மத போதகர் மேலதிக சிசிக்சைக்காக வெலிகந்தை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிதாக இனங்காணப்பட்ட இருவரும் அங்கு மாற்றப்படுவார்கள் என்று அறியமுடிகிறது.

சுவிஸ்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வந்த போதகருடன் நெருங்கிப் பழகியவர்களே பலாலி தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.