பிறந்த குழந்தைகளுக்கு 'கொரோனா', 'லொக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்!!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, 'கொரோனா', 'லொக் டவுன்' என பெயர்சூட்டியுள்ளனர்.
உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், இந்த ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு 'லாக் டவுன்' என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, 'கொரோனா' என பெயர் சூட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையின் சின்னமாக இருப்பதால், குழந்தையின் தாயிடம் அனுமதி பெற்று கொரோனா என பெயரிட்டேன், என்றார்.'லாக் டவுன்' குழந்தையின் தந்தை, பவன் கூறுகையில், 29ம் தேதி மாலை, நான் என் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு அவர் ஒரு அழகான ஆண் குழந்தையை பிரசவித்தார். நாம் அனைவரும் கொரோனா தொற்றுநோய்க்கு ஆளாகி வருவதால் குழந்தைக்கு லாக் டவுன் என பெயரிட்டேன். என்னை பொறுத்தவரையில், கொடிய வைரஸிலிருந்து நம்மை காப்பாற்ற, முழு நாட்டிலும் ஊரடங்கு விதிக்க பிரதமர் மோடி, சரியான நடவடிக்கை எடுத்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், தங்களையும் தேசத்தையும் காப்பாற்றவும், என் மகன் அனைவருக்கும் நினைவூட்டுவான். இவ்வாறு அவர் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)