விற்பனைக்கு வருகிறார் ரொனால்டோ!!

கொரோனா வைரஸ் பாதிப்பால் கால்பந்து உலகம் முடங்கியுள்ளது. வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தள்ளாடுகின்றன.


இத்தாலியின் யுவண்டஸ் அணி நட்சத்திர வீரர் ரொனால்டோவை குறைந்த விலைக்கு விற்க முன்வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், ஒலிம்பிக் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது வேறு தேதிக்கு மாற்றப்பட்டன.

இதனால் போட்டி மூலம் கிடைக்கும் பெரும் வருவாயை கால்பந்து அணி நிர்வாகங்கள் இழந்து வருகின்றன. தவிர 'டிவி' நேரடி ஒளிபரப்பு வருமானத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. பல நுாறு கோடிகள் கொட்டிக் கொடுத்து வாங்கிய நட்சத்திர வீரர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தள்ளாடுகின்றன.
இத்தாலியின் யுவண்டஸ் அணி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவை, கடந்த 2018ல் ரூ. 831 கோடிக்கு வாங்கியது. இவருக்கு வாரம் ரூ. 4.2 கோடி என, ஆண்டுக்கு சுமார் ரூ. 243 கோடி வரை தருகிறது.

சம்பளம் குறைவு

தற்போது போட்டிகள் இல்லாத நிலையில் சக அணி வீரர்கள், நிர்வாகத்துக்கு உதவும் வகையில் மார்ச் முதல் ஜூன் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள ரொனால்டோ சம்மதம் தெரிவித்துள்ளார். இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்து மீண்டும் போட்டிகள் நடந்தாலும், அணி நிர்வாகத்தால் விரைவில் மீண்டு வர முடியாது எனத் தெரிகிறது. இதையடுத்து ரொனால்டோவை விற்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வேறு வழியில்லை

கிடைத்த வரை லாபம் என்ற வகையில் சந்தை மதிப்பில் 28 சதவீதம் குறைத்து, ரூ. 523 கோடிக்கு விற்க யுவண்டஸ் அணி முடிவெடுத்துள்ளது. இருப்பினும் அணி மீள முடியாத நிலை ஏற்பட்டால், இரண்டாவது நட்சத்திர வீரர் ரூ. 3.2 கோடி சம்பளம் வாங்கும் ஆரோன் ராம்சேவையும் (வேல்ஸ் அணி) கழற்றி விட முடிவெடுத்துள்ளனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.