கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியிட்ட செந்தில் ராஜலஷ்மி!

கிராமிய இசை பாடகர்களான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலஷ்மி தற்போது கொரோனாவிற்கு எதிரான விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர் .



ராஜலட்சுமி செந்தில்கணேஷ், மக்கள் இசை கலைஞர்கள்

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்ற பிறகு தொடர்ந்து சினிமா பாடல்களையும் பல விழிப்புணர்வு பாடல்களையும் மற்றும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வரும் செந்தில் ராஜலஷ்மி தம்பதி தற்போது கொரோனா தொற்றுக்கு எதிரான விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்கள்.

பல முன்னனி பிரபலங்கள் முதல் சிறிய பிரபலங்கள் வரை கொரோனாவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில். தற்போது இந்த பாடலின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றுள்ளனர் செந்தில் ராஜலஷ்மி தம்பதி. இந்த பாடலை வழக்கம் போல அவர்களின் ஸ்டைலில் கிராமிய பாடலாக உருவாக்கி உள்ளனர்

இந்த பாடலில் கத்தியை தீட்ட வேண்டாம் புத்தியை தீட்டுங்கள் என வலியுறுத்தி உள்ளனர். ஏனெனில் கொரோனா என்பது கொடிய மனிதன் இல்லை கொடிய வைரஸ். இதை எதிர்க்க கத்தி தேவையில்லை புத்தி தான் தேவை என்று பாடலில் அழகாக கூறியுள்ளனர் .

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது செய்யபடும் வழிமுறைகள் நாம் கடைபிடித்து வந்ததே. வெளியே சென்று வீடு திரும்பியதும் கை கழுவுதள் , மஞ்சள் மற்றும் வேப்பிலை பயன்படுத்துதல் போன்றவை முன்னோர்கள் கூறி வந்தவை. இதை நாம் இப்போது செய்து கொரோனாவை துறத்தி அடிக்கலாம் என்று பாடல் வாயிலாக கூறியுள்ளனர் .

சினிமா பாடல்களை தவிர்த்து தனிப்பட்ட பல கிராமிய பாடல்களை பாடி வரும் செந்தில் மற்றும் ராஜலஷ்மி தம்பதி. தற்போது "எங்கிருந்து எவனோ வர்றானாம்" பாடலின் மூலம் மீண்டும் தங்களின் கிராமிய பாடல் வளத்தை நிரூபித்து உள்ளனர் .

இந்திய அரசு வரும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் சிலர் அறியாமையால் ஊர் சுற்றியும் சுத்தம் பற்றியும் சரியான கவனம் இன்றி திரிந்து வருகின்றனர். அவர்களை இந்த பாடல் சென்று சேர்ந்து சரியான விழப்புணர்வை ஏற்படுத்தும் என்பது பலரின் நம்பிக்கை.

source: filmibeat.com

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.