அனைவருக்குமான பொது அறிவித்தல்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் வீதியில் அமர்ந்திருப்பதோ, அல்லது நடமாடுவதோ, அல்லது விளையாடுவதோ கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது. அது தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.
சில இடங்களில் பொலிஸ் அல்லது இராணுவத்தினரை கண்டால் மாத்திரம் வீட்டுக்குள் ஒளிந்து பின்னர் வீதிகளில் நடமாடுவதாக தொடர்ச்சியாக கொரோனா தடுப்பு செயலணிக்கு கிடைக்கப்பெறும் முறைப்பாட்டிற்கமைய இதனைக் கட்டுப்படுத்துவதற்காக இன்றிலிருந்து 3000 இற்கும் அதிகமான AMCOR தொண்டர்கள் வீட்டிலிருந்தபடியே கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள இவர்கள் பின்வரும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
1. ஊரடங்கு சட்டத்தை மீறுபவர்களை நேரடியாக அறிவுறுத்தி அவர்களை வீட்டிலிருக்கச் செய்தல்.
2. அதனை உதாசீனம் செய்பவர்கள் தொடர்பான விபரங்களை காவல்துறைக்கு வழங்கி சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுதல்,
3. ஊரடங்கு சட்டம் மீறப்படும் சம்பவங்களை photo / video ஆதாரங்களாக சேகரித்தல்.
3000 இற்கும் அதிகமான எமது AMCOR தொண்டர்கள் மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளனர். உங்கள் தெருவிலும் ஒருவர் உள்ளார். அவர் உங்களை அவதானிப்பார்.
உங்கள் பாதுகாப்பையும், தேசத்தின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டே இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
இதனை ஏனையவர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி.
அம்கோர்

.jpeg
)