பிறந்தநாள் கொண்டாடிய ஆவாகுழு- சுற்றிவளைத்த இராணும்!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா குழுவை சேர்ந்த வினோதனின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வினோதன் உள்ளிட்ட பலர் தப்பித்து சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகம் சேர்ச் லேனில் இன்று மாலை இடம்பெற்றது.
ஆவா குழுவை சேர்ந்த வினோதனின் பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது நண்பர்களால் மல்லாகத்தில் உள்ள வீடொன்றில் இன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதுதொடர்பில் தகவல் கிடைத்து அந்த வீட்டை இராணுவத்தினர் முற்றுகையிட்டு நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கைதான அனைவரும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

.jpeg
)




