பொல்லால் தாக்கப்பட்டு சமுர்த்தி அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி!
மாத்தறையில் சமுர்த்தி அதிகாரி பொல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த சிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெனியாய, கொலவெனிகம, குடகலஹேன பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை கொடுத்துவிட்டுத் திரும்பிய சமுர்த்தி உத்தியோகத்தரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கொலவெனிகம கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வைத்து நேற்று (வெள்ளிக்கிழமை) 3.30 மணியளவில் உதவித் தொகையையும் மரக்கறி விதைகளையும் கொடுத்துவிட்டு வரும்போது உதவித்தொகைபெற்ற பெண்மணி ஒருவரின் சகோதரனால் சமுர்த்தி அதிகாரி தாக்கப்பட்டுள்ளார்.
தனக்கு 5 ஆயிரம் கொடுக்கவில்லை என்று கூறியே தன்னை குறித்த நபர் பொல்லால் தாக்கியுள்ளதாக 48 வயதுடைய நாகொடகமகே ஜனசந்த சமுர்த்தி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து குடகலஹேன பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய நபர் தெனியாய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




