தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு வெளியேறிய 222 பேர்!!
புனாணை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து மேலும் 222 நபர்கள் சான்றிதழ்களுடன் நேற்று காலை தங்களது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இராணுவத்தினால் வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகளுடன் கொழும்பு மற்றும் கடவத்த ஆகிய பிரதேசங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர், வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் காலத்தினை நிறைவு செய்து புறப்பட்ட நபர்களை அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




