ஈரோட்டில் மட்டும் இவ்வளவு பேரா தனிமை

ஈரோடு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை விபரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஆரம்பத்தில் மெதுவாக காணப்பட்டு வந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் வீரியம் அடையத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா தமிழகம் மாநிலங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிராவை தொடர்ந்து தமிழகம் தற்போது 2-வது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸிக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் டெல்லி இஸ்லாமியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டவர்களாவர்.

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் 88 பேருடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திண்டுக்கல் (43), நெல்லை (37), ஈரோடு (32), கோவை (29), நாமக்கல் (24), தேனி (18) ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

இந்த நிலையில், அதிகம் பாதித்த மாவட்டங்களில் 4-வது இடத்தை பிடித்துள்ள ஈரோட்டில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது ஈரோடு மட்டுமல்லாது கொங்கு மண்ட மாவட்டங்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Blogger இயக்குவது.