வந்தது கொரோனா:மரண பீதியில் மாநில அரசு

1500 பேருக்கு விருந்து வைத்த நபர் கொரோனாவால் பாதிக்கப்பட, மத்திய பிரதேச மாநிலமே அரண்டு போயிருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாயாரின் நினைவுநாளில் பங்கேற்க கடந்த மார்ச் 17ம் தேதி, துபாயில் இருந்து சொந்த ஊரான மோரியனாவுக்கு திரும்பி உள்ளார்.

அதன்பின், தாயார் நினைவுநாளான 20ம் தேதி 1500 பேருக்கு விருந்து வழங்கி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி சுரேஷுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அவருடன் 20 நாட்களாக அவர் யாருடன் தொடர்பு கொண்டார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது. அப்போது அவர் 1500 பேருடன் விருந்து சாப்பிட்டது தெரிய வந்திருக்கிறது.

தற்போது 23 பேருக்கு நடைபெற்ற சோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. விருந்தில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் சோதனை செய்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.
Blogger இயக்குவது.