இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.

வெலிசர கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருந்த 6 பேரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 86 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.