எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா நோய் பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, அத்யாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அத்யவாசிய பொருட்கள் விற்பனைக்கு கட்டுப்பாடு விதித்தல், ஊடரங்கு நீட்டிக்காலாமா, மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

.jpeg
)