வேட்டியுடன் வீதிக்கு வந்த ரஜினி📷
பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, சாதாரண குடிமகனாக தாமும் வீட்டு வாசலுக்கு வந்து தீபம் ஏற்றி ஆச்சர்யப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொரோனா பாதிப்பு ஓயவில்லை.
3வது முறையாக கொரோனா குறித்து மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நேற்று இரவு 9.00 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மக்கள் அனைவரும் வீட்டில் விளக்குகளை அணைத்து செல்போன் டார்ச், அகல் விளக்குகள், மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்று நாடு முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் விளக்கேற்றினர். முக்கிய திரை நட்சத்திரங்கள் பிரதமர் மோடி சொன்னதை ஏற்று வீதிகளில் குடும்பத்துடன் வந்து விளக்கேற்றினர்.
அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தீப ஒளி ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினார். அவரது இந்த செயல் அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

.jpeg
)