தெற்கிலிருந்து இருந்து வடக்கிற்குள் நுளையும் அத்தியாவசியப் பொருட்கள்!!
தென்பகுதியில் இருந்து வவுனியா உள்ளிட்ட வடபகுதிக்கான அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதி இன்று வந்தடைந்தன.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தாக்கம் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டத்தால் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவியிருந்தது.
இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடபகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுடன் பாரவூர்திகள் வவுனியாவை வந்தடைந்தன.
கொழும்பில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பாரவூர்திகளை ஈரப்பெரியகுளம் இராணுவ சோதனை சாவடியில் பரிசோதித்து பதிவு செய்த பின்னர் வவுனியாவிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் குறித்த பாரவூர்திகளில் கொண்டு வரப்பட்ட அரிசி, மா, சீனி, பருப்பு, சோயா, கிழங்கு, பூடு, வெங்காயம், செத்தல் மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், சதோச விற்பனை நிலையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள் என்பவற்றுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகியவற்றுக்கான பொருட்கள் அடங்கிய பாரவூர்திகள் வவுனியாவைக் கடந்து வடக்கு நோக்கி சென்றிருந்தன.

.jpeg
)




