சென்னை அரசு வைத்தியருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவும் தன்மை உள்ளது. அதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்கள், நர்ஸ்களுக்குப் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால்தான் தனிமனித கவச பாதுகாப்பு உடைகளை அணிந்தபடி டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மையத்தில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் வீட்டில் தங்கியிருந்த அவரின் தாய், தந்தை மற்றும் பாட்டி, வெளிநபர்கள் 5 பேர், அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் என 35 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,``சென்னை கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் டாக்டர், மேற்கு மாம்பலத்தில் உள்ள பொதுசுகாதார மையத்தில் பணியாற்றிவருகிறார். இவர், மார்ச் 16-ம் தேதி வரை சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு அவர், பொது சுகாதார மையத்துக்கு வந்தார். அங்கு வரும் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். இந்தச் சமயத்தில் கடந்த 4-ம் தேதி இவருக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது.
மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியும் ஏற்பட்டதால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி எனத் தெரிந்தது. அதனால் டாக்டருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களை முதலில் சேகரித்தோம்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு வேகமாகப் பரவும் தன்மை உள்ளது. அதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்கள், நர்ஸ்களுக்குப் பரவ அதிக வாய்ப்புள்ளது. அதனால்தான் தனிமனித கவச பாதுகாப்பு உடைகளை அணிந்தபடி டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மையத்தில் பணியாற்றிய டாக்டர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் வீட்டில் தங்கியிருந்த அவரின் தாய், தந்தை மற்றும் பாட்டி, வெளிநபர்கள் 5 பேர், அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் என 35 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில்,``சென்னை கோடம்பாக்கத்தில் குடியிருக்கும் டாக்டர், மேற்கு மாம்பலத்தில் உள்ள பொதுசுகாதார மையத்தில் பணியாற்றிவருகிறார். இவர், மார்ச் 16-ம் தேதி வரை சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதன்பிறகு அவர், பொது சுகாதார மையத்துக்கு வந்தார். அங்கு வரும் நோயாளிகளுக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். இந்தச் சமயத்தில் கடந்த 4-ம் தேதி இவருக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது.
மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறியும் ஏற்பட்டதால் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு நேற்று தெரியவந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி எனத் தெரிந்தது. அதனால் டாக்டருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரங்களை முதலில் சேகரித்தோம்.
குறிப்பாக, பொது சுகாதார மையத்தில் டாக்டர் பணியில் இருந்தபோது வந்த நோயாளிகளைக் கண்டறிந்தோம். மேலும், பொது சுகாதார மையத்தில் பணியாற்றிய நர்ஸ்கள், ஊழியர்கள் ஆகியோரையும் டாக்டர் வீட்டில் இருந்தவர்கள் என 35 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்துவருகிறோம். அவர்களின் உடல்நலனை அடிக்கடி பரிசோதித்து வருகிறோம். டாக்டருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன" என்றனர்.
சென்னையில் முதல் முறையாக அரசு டாக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக டாக்டர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.jpeg
)