யாழ் நாகர்கோவில் பகுதியில் தந்தையால் மகள் பாலியல் வல்லுறவு!!
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் தந்தையால் மகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…
ஜோசப் ஜோன்சன் பகிரதன் (வயது 33) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே தனது 11 வயது நிரம்பிய மூத்த மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த தந்தை மதுபோதையில் தான் இவ்வாறான கீழ்தரமான வேலைகளைச் செய்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மனைவியால் பருத்தித்துறை பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்த போது இவர் தப்பியோடிய நிலையில் மீண்டும் பொலிசாரின் வலையில் மாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




