ஜனாதிபதியின் விசேட செயலணிக்கான வர்த்தமானி அறிவிப்பு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்திற்கொண்டு, மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் விசேட செயலணி மேற்கொண்டு வருகிறது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக அமைக்கப்பட்டுள்ள செயலணி குறித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவிப்பில்,
கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழித்துக்கட்டும்போது அதிக நெருக்கடியான நிலையில் உள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், அப்பிரதேசங்களுக்கு கிராமியப் பிரதேச மற்றும் உற்பத்தியாளர்களால் வழங்கப்படும் உணவு விநியோகம் உடனடியாக நுகர்வோருக்குப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களும் வாழ்க்கையை உரியவாறு நடாத்திச் செல்வதற்குத் தேவையான சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதை வழிநடத்துதல், கூட்டிணைத்தல் மற்றும் தொடராய்வு செய்வதற்காக இந்த ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த செயலணியில் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி பசில் ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில், வட மாகாண ஆளுநர், பி. எஸ். எம். சார்ள்ஸ் மேல் மாகாண ஆளுநர், திரு ஏ. ஜே. எம். முசம்மில், பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டினெல் ஜெனரல் சவேந்திர டி சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் அடங்கலாக 40 பேர் இடம்பெற்றுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




