மருதானை நபரால் தனிமைபடுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
கொரோனாவினால் உயிரிழந்த ஒருவர் ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று வந்ததால், நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நால்வரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுநோயினால் உயிரிழந்த மூன்றாவது நபரான மருதானையை சேர்ந்த தங்கநகை வர்த்தகரே, கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையம் சென்ரிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து உயிரிழந்தவரின் மகன் வசித்த கிராண்ட்பாஸ் பகுதியையும மூட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவரின் மகன் வசிக்கும் கிராண்ட்பாஸ் இல்லத்தின் தங்கியிருந்தபோது, இருவரால் ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதேபோல அதற்கு முன்னதாக ஊரடங்கு உத்தரவில் பயணிப்பதற்கான அனுமதியை பெற கிராண்ட்பாஸ் பொலிசுக்கு சென்றுள்ளனர
இதனடிப்படையிலேயே அங்கு கடையாற்றும் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




