4 நாட்களாக திடீரென இறக்கும் காக்கைகளால் தமிழகத்தில் மக்கள் அச்சம்!!
தமிழகத்தின் காவேரிப்பாக்கம் அருகே தொடர்ந்து 4 நாட்களாக காகங்கள் திடீரென இறப்பதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னியூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அங்கு வசிப்போர் பெரும்பாலானோர் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பன்னியூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் திடீரென காகங்கள் மயங்கிய நிலையில் கீழே விழுந்து இறந்துவிடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ள நிலையில் தொடர்ந்து நான்கு நாட்களாக காகங்கள் திடீரென இறப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




