அரச அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை-யாழ் மாவட்ட அரச அதிபரிற்கு குவியும் பாராட்டுக்கள்!!
யாழ் மாவட்டம் ஆழியவளை சமுர்த்தி உத்தியோகத்தர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்தப்படுவதற்காக அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது.
யாழ் மாவட்ட அரச அதிபர் துரித நடவடிக்கை எடுத்து வருவதுடன் மக்கள் இந்த விசாரணை மேற் கொள்ளும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
விசாரணை இடம்பெறும் இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




