வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு!!
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே தெரிவித்துள்ளார்.
வட் வரி செலுத்துகை தொடர்பாக பெப்ரவரி மாதம் நிறுவனங்கள் சேகரித்த தொகையை மார்ச் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் மார்ச் 20 ஆம் திகதிக்கு பதிலாக ஏப்ரல் 30 ஆம் திகதி வரை கட்டணம் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நிறுவனம் தொடர்பான விபரங்களை கணக்கிட அதிகாரிகளுக்கு சிறிது நேர கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரி செலுத்துவோர் வங்கிகளுக்கு செல்லாது வீட்டிலிருந்தே ஒன் லைன் மூலம் தனது வங்கி கணக்கிலிருந்து பணத்தை உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு மாற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




