நுவரெலியா நகரில் சுப்பர் மார்க்கெற்றில் தீ விபத்து!

நுவரெலியா நகரத்தில் அமைந்துள்ள சுப்பர் மார்க்கெற் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பகுதியளவு எரிந்து பொருட்கள் அழிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று (சனிக்கிழமை) மதியம் 12 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
நுவரெலியா பொலிஸார், நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என்பதுடன் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.