யேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு வவுனியாவில் உதவி

இன்றையதினம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தொழிலுக்கு செல்ல முடியாமால் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் எம் உறவுகளுக்கு !

உரிய முறையில் பொலிஸ்(காவல்துறையிடம்) அனுமதி எடுத்து வீடு வீடாக சென்று உதவிகளை வழங்கிவருகிறார்கள்!
அந்தவகையில் இன்று வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு புளியம்குளம்,கனகராயன்குளம்,நயினாமடு ஆகிய இடங்களில் வசித்து வரும் விசேட தேவைக்குட்பட்ட (அங்கவீனமுடைய)வறியக குடும்பங்களுக்கும் மற்றும்
அன்றாடம் கூலி தொழில் செய்து வாழ்க்கை நடாத்திவரும் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் எமது அமைப்பாள் வழங்கப்பட்டது.!

இன்னும் பல மாவட்டங்களில் உள்ள உறவுகளுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்பட இருக்கின்றது!
காலத்தின் தேவை அறிந்து எமது அமைப்பானது எமது மக்களை வறுமையில் இருந்து பாதுகாக்கவேண்டிய கடமையில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது!
நீங்கள் யாரவது உதவிக்கரம் நீட்ட விரும்பினால் .
நீங்களாகவே எமது தாயக செயல்பாட்டாளர்கள் ஊடக நேரடியாக சகல மாவட்டத்திற்கும் உதவலாம் !
எந்த நேரத்திலும் அவர்கள் கடமையாற்ற தயாரக இருக்கின்றார்கள்!
Blogger இயக்குவது.