ஒருவழியாக ரேபிட் கிட்கள் சென்னை வந்தடைந்தது; பரிசோதனையை விரிவுபடுத்த தமிழகம் தயார்?
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட ஒரே வழி அதிகமாக பொதுமக்களுக்கு பரிசோதனை செய்வதுதான்.உலகநாடுகளில் மிகக்குறைவாக பரிசோதனை செய்யும் நாடு இந்தியா என்ற அவப்பெயர் இருக்கிறது.
முன்னேற்பாடாக பரிசோதனை கருவிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்திருந்தால் நமக்கு இந்த தலைகுனிவு மட்டுமல்ல,இந்த பாதிப்பும் வந்திருக்காது. இந்தியாவில் கொரோனாவின் உண்மை நிலை இன்னும் சரியான கணிப்பிற்கு வரவில்லை.முழுமையான பரிசோதனைகள் செய்த பிறகே தெரிய வரும்.
கொரோனா வைரஸ் பரிசோதனையில் முக்கியமானதாகக் கருதப்படும் ரேபிட் ஆன்ட்டிபாடி கிட், ஆர்என்ஏ பரிசோதனைக் கருவிகள். மிகத் தாமதமாக சீனாவிடம் இந்தியா ஆர்டர் செய்திருந்தது.அதுபோல தமிழ்நாடும் சீனாவிடம் ரேபிட் ஆன்ட்டிபாடி கிட் ஆர்டர் செய்திருந்தது.
இந்நிலையில் திடீரென மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகம் ஆர்டர் தன்னிச்சையாக செய்யமுடியாது எல்லாவற்றையும் நாங்களே வாங்கி, எல்லா மாநிலத்திற்கும் பிரித்து தருவோம் என்றது.தமிழக அரசு வழக்கம்போல தலையை ஆட்டிவிட்டு வந்ததே தவிர, தட்டி கேட்க வில்லை.
ஒவ்வொரு நாளும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரேபிட் ஆன்ட்டிபாடி கிட் இன்று வந்துவிடும், நாளை வந்துவிடும், என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் தவிர வந்தபாடில்லை,இதை எதிர்த்து எதிர்கட்சிகள் கேள்வி கேட்டால் “அரசியல் செய்யாதீர்கள்” என முதலமைச்சர் பதிலளிக்கிறார்.எதிர்கட்சிகளும் அமைதியாக இருந்து விடுகின்றன.
நேற்று முன் தினம் சீனாவுக்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி 6.50 லட்சம் உபகரணங்கள் இந்தியா வந்து சேரும் என தெரிவித்து இருந்தார்.மத்திய அரசு அதை உறுதிபடுத்தியது.அந்த நேரத்தில்தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரண்டு தினங்களில் கொரோனா தமிழகத்தில் பூஜ்ஜியமாகி விடும் என அசிரீரி வந்ததுபோல் ஆருடம் வழங்கி இருந்தார்.
ஆனால், அறிவியல் என்பது வேறு அல்லவா! எந்த பரிசோதனையும் செய்யாமல் கொரோனா எப்படி விலகும்?இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று 56 பேர் பாதிக்கப்பட்டார்கள்.
அதிகமாக தமிழக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசிடம் ரேபிட் கிட் கருவிகள் இல்லை. அதற்காக 4 லட்சம் கருவிகள் சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஏப் 10-ம் தேதி 1 லட்சம் ரேபிட் கருவிகள் வந்துவிடும் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். மத்திய அரசின் மூலமே இவை வாங்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா இடையில் புகுந்து ரேபிட் கருவிகளை வாங்கிவிட்டது என்பதாலும் தமிழகத்துக்கு ரேபிட் கருவிகள் வரவில்லை எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த ரேபிட் கிட்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன.என செய்திகள் வந்தன
இதுகுறித்து பெய்ஜிங்கிற்கான இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா பரிசோதனைக்காக 20 லட்சம் பரிசோதனைக் கருவிகள் இந்தியா சார்பில் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. இதில் 6.5 லட்சம் கருவிகள் ரேபிட் ஆன்ட்டிபாடி டெஸ்ட், ஆர்என்ஏ எக்ஸ்ட்ராகஸன் கிட் ஆகியவை இன்று குவாங்சு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தது என்றார். 20 லட்சம் கருவிகள் ஆர்டர் செய்ததில் 6.5 லட்சம் கருவிகளே குறைந்த காலஅளவில் பெறப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு மாநிலங்களுக்கு இதை பிரித்து கொடுக்கும்.அந்த வகையில் மத்திய அரசு சீனாவிடமிருந்து வாங்கிய 6.5 லட்சம் கருவிகளில் தமிழகத்திற்கு வெறும் 12000 ரேபிட் கிட்கள் அனுப்பப்பட்டு, இன்று ஒரு வழியாக சென்னை வந்து சேர்ந்தது.
ஏற்கனவே தமிழகம் தன்னிச்சையாக ஆர்டர் செய்திருந்ததில் 24000 ரேபிட் கிட்டுகளும் வந்து சேர்ந்தது. ஆக மொத்தம் தமிழகத்தின் கைவசம் உள்ள ரேபிட் கிட்கள் மொத்தம் 36000 கிட்டுகள்.
உடனடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அறியும் சோதனையை ரேபிட் கிட் கருவிகள் மூலம் ஸ்க்ரீனிங் டெஸ்ட்டுக்களை விரைவுபடுத்த வேண்டும்.தமிழக அரசு மத்திய அரசிடம் அதிக ரேபிட் கிட்டுகளை கேட்டு பெறவேண்டும். இந்தியாவிலே பரிசோதனை செய்ய அதிக ஆய்வகங்கள் உள்ள மாநிலம் தமிழகம்.ஆனால் நம் கைவசம் இருப்பதோ வெறும் 36000 கிட்டுகள்தான்.என்ன செய்ய போகிறது தமிழகம்? வெளிப்படையாக பரிசோதனை எண்ணிக்கைகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த நேரத்தில் எழுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)