இன்று தேசியத் தலைவரின் மூத்த மகனும்/ புலிகள் அமைப்பின் போராளியுமான சார்ள்ஸ் அன்ரனியின் பிறந்த நாள்.

தமிழர்களின் பண்பாட்டு அட்டவணை.
நண்டுப் பண்பாடு ( பிரபாகரன் காலத்திற்கு முன்)
புலிப் பண்பாடு ( பிரபாகரன் காலம்)
மீண்டும் நண்டுப் பண்பாடு ( 2009 இற்குப் பின்)

உங்களுக்கு தமிழ் கிறிஸ்தவர்களான மைக்கேலின் மகளையும்/ பேதுருப்பிள்ளையின் மகளையும் தெரியுமா?
தமிழீழப் பெண் விடுதலையின் முன்னோடிகளாக தமது மத அடையாளத்தைத் துறந்து முதல் பெண் மாவீரர்/ முதல் பெண் தாக்குதல் தளபதி என்று வரலாற்றில் பதிவாகிப்போன மாலதியும்/ சோதியாவும்தான் அவர்கள்.
தலைவர் பிரபாகரன் தனது முதல் தளபதிக்கு “சீலன்” என்று பெயர் சூட்டினார். ஆனால் தளபதி சீலன் வீரச்சாவடைந்த பின் தனக்குப் பிறந்த மகனுக்கு அவர் நினைவாக ‘சீலன்’ என்று பெயர் சூட்டவில்லை – மாறாக, அவரது இயற்பெயரான தமிழ் கிறிஸ்தவ மரபைக் குறிக்கும் “சார்ள்ஸ் அன்ரனி” என்றுதான் பெயர் சூட்டினார்.
இதுதான் புலிப் பண்பாடு.
அவர் ஒரு இனத்தின் கால கட்டத்தையே புரட்டிப் போட்டார்.
அதுதான் நாம் ஒரு சிலர் அவரை புரட்சியாளன் என்ற தளத்திலிருந்து கோட்பாட்டாளன் என்ற
தளத்திற்கு நகர்ந்த அவரது உண்மையான அடையாளத்தை நிறுவ முயன்று வருகிறோம்.
அதுதான் ஓயாது பிரபாகரனியம் / நந்திக்கடல் கோட்பாடுகள் என்று பேசி வருகிறோம்.
இது அவரை மேன்மைப் படுத்தவோ /புகழுரைக்கவோ அல்ல.
இந்த இனம் இதனூடாகத்தான் மீண்டும் நண்டுப் பண்பாட்டில் இருந்து புலிப் பண்பாட்டுக்குள் மீள் திரும்பும் என்பதற்காகவே…
அவரை போராளியாக/ யுத்த விரும்பியாகச் சுருக்கி வைத்திருப்பவர்களுக்கு இது புரியாது.
அதுதான் சிலர் தமிழர்களை மதரீதியாகத் துண்டாடும் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Blogger இயக்குவது.