உலக முடக்கம் மீளுமா?



சீனா வூகானில் பிறந்த covid19 இரண்டு மாதத்தில் விஸ்வரூபம் எடுத்து பரவ தொடங்கியது நிலமையை உணர்ந்த சீன அரசு இரும்பு கரம் கொண்டு முடிந்தளவு தன் நாட்டிற்குள் கட்டுக்குள் கொண்டு வந்தது அண்ணளவாக 180 கோடி மக்கள் தொகையை கொண்ட நாட்டில் 4000 உட்பட்ட உயிர் இழப்புடன் நின்று போனது பேரதிசயமே சீனாவை பொறுத்த வரை கண்ணுக்கு தெரியாத சிறு புள்ளியே இந்த இழப்பு.

அதன் பின்னரான நோய்பரவல் உலகம் வரை வியாபித்தது ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகளில் மக்கள் நம்பி இருந்தார்கள் நமது அரசுகள் இவற்றை தடுத்து விடுவார்கள் என்று ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்து போனது.
நோய் காட்டு தீ வேகத்தில் பரவியது மார் தட்டிய அரசுகளிடம் குறைந்தது முக கவசங்கள் கூட இருப்பில் இருக்கவில்லை அரசுகள் சொன்ன பதில் நோய் பாதித்தவரும் பராமரிக்கும் மருத்துவர்களும் முக கவசம் அணிந்தால் போதும் என்று.
கிட்ட தட்ட ஒரு மாதமாக தினமும் ஆயிரக்கணக்கான உயிரை covid19 திண்டு கொண்டு இருக்கிறது அரசுகள் நோயை வர விட்ட பின் எல்லைகளை மூடினர் அரச நிர்வாகங்கள் முடங்கின ஊரை கட்டு படுத்தினால் நோய் அடங்கும் என்றவர்கள் அதன் பலன் கனிந்து கொண்டு இருக்கும் போதே மீள் திரும்ப முனைகின்றனர்.
உயிர் இழப்புகள் குறையவில்லை சீனாவை தவிர சில நாடுகள் வரு முன்னரே காத்து கொண்டனர்.
ஆனால் இந்த அவசரமான மீள் திரும்புதல் மிகவும் ஒரு பேரழிவை உலகத்தில் ஏற்படுத்தப்போகிறது.
அதாவது நோயுடன் இசைவாக்கம் அடைவதே இதன் இலக்கு மருந்து கண்டுபிடிப்பு முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது அதற்கு சில மாதங்கள் செல்லும் அது வரை பொறுத்து இருந்து தமது பொருளாதாரத்தை இனியும் இழக்க முடியாது என்று கருதிய அரசுகளின் பொருளாதார போட்டி
ஒரு முடிவை நோக்கி நகர வைத்துள்ளது.
பெரும் போர் நடை பெறும் போது இயல்பான வாழ்க்கை வாழ்வது போல் அதில் பலர் இறப்பார்கள் பலர் வாழ்வார்கள் அன்றாடம் கடந்து போவது போல் இன்றைய இந்த உயிரியை எதிர் கொள்வது.
அதாவது நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், இளையவர்கள் உயிரியுடன் இசைவாக்கம் பெற்று வாழ்வார்கள்.
ஏனைய வியாதிகள் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வயோதிபர்கள் மரணிப்பார்கள்.
மரணவிகிதம் உச்சத்தில் உள்ள வேளையில் ஒரு அரசை பார்த்து மற்ற அரசுகள் எடுக்கும் அவசரமான மீள் திரும்பல் என்ற முடிவு உலகத்தில் நாலில் ஒரு பகுதி மக்களை காவு கொள்ளப்போகிறது.
இது வரை முகக்கவசம் தேவை இல்லை என்று சொன்ன அரசு இனிமேல் முகக் கவசம் அவசியம் என்று உரைக்கிறது.
இது வரை நகரங்களில் மட்டுமே வலம் வந்த உயிரி விரைவாக கிராமங்களிலும் வலம் வரப்போகிறது
பெருகி வரும் உலக சனத்தொகை அகதிகள் பிரச்சனை பிந்திப்போகும் ஆயுள் வயோதிபர்களை பராமரிப்பு செய்வதற்கான மில்லியன் கணக்கான நிதிகள் இவையே இன்றைய அரசுகள் கிருமியை பெருக்கி ஒரு இலக்கை அடைய முயற்சிக்கின்றனர்.
இன்றைய பிரான்ஸ் செய்திகளின் படி மே 11 பிரான்ஸ் நாடு உள்ளிருப்பு காலத்தில் இருந்து வெளியே வர கால நிர்ணயம் செய்துள்ளது அதன் பின்னர் கூட 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஏனைய நிரந்தர தொற்றா நோய் உள்ளவர்கள் 18 மில்லியன் மக்கள் வெளியே நடமாட முடியாதாம் இது பிரான்ஸ் சனத்தொகையில் நாலில் ஒன்றாகும்.
Blogger இயக்குவது.