பிரிட்டனின் கொரோனா இறப்புகள்

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் +160 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் +170 ஆக பதிவாகிய இறப்புகள், இன்று மீண்டும் 10 ஆல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 34,796 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிதாக அடையாளம் காணப்பட்ட ++2,711 தொற்றாளர்களுடன், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 246,406 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இத்தாலியில் +99 இறப்புகளும், ரஷ்யாவில் +91 இறப்புகளும், பெல்ஜியத்தில் +28 இறப்புகளும், ஜேர்மனில் +21 இறப்புகளும், சுவீடனில் +19 இறப்புகளும், மறுபுறம் மெக்ஸிக்கோவில் +132 இறப்புகளும், பிறேசிலில் +83 இறப்பகளும், இந்தியாவில் 119 + இறப்புகளும், பதிவாகி உள்ளன.

ஆரம்பத்தில் அதிகளவிலான இழப்புகளை தாங்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்தும் 200களில் அல்லது 100களில் இறப்புகளை கட்டுப்பாட்டுள் வைத்திருக்கும் நிலையில், பிரிட்டனின் இறப்புகளும், மிண்டும் 100களில் தொடர்கின்றன. இதேவேளை இந்த நாடுகளில் விதிக்கப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளில், தளர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 90 ஆயிரத்தைக் கடந்து 91,093ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை
1,532,861 ஆக உயர்ந்துள்ளது.
Powered by Blogger.