கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் சுவை மற்றும் வாசனையின் இழப்பும்

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அறிகுறிகளின் பட்டியலில் சுவை மற்றும் வாசனையின் இழப்பை உத்தியோகபூர்வ பிரித்தானியா சேர்த்துள்ளது.


இதனால், மக்கள் இதனை கவனித்து அவதானமாக செயற்பட வேண்டுமென மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம், அரசாங்கத்தின் உயர்மட்ட விஞ்ஞான ஆலோசகர்களுடன் மேற்கொண்ட ஆய்வின் பின்னர், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

தேசிய சுகாதார சேவையின் அறிகுறிகளின் பட்டியலில், முன்னதாக காய்ச்சல் மற்றும் இருமல் மட்டுமே இருந்தன. தற்போது வாசனை அல்லது சுவை இழப்பு (அனோஸ்மியா என்றும் அழைக்கப்படுகிறது) இவை இரண்டும் சேர்க்கப்பட்டுள்ளன.

எனினும், வாசனை மற்றும் சுவை இழப்பு என்பது ஜலதோஷம் போன்ற பிற சுவாச நோய்த்தொற்றுகளின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால், காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளாக இருக்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Blogger இயக்குவது.