நேற்று வரை சலூன் கடைகள், ஜவுளி கடைகள் இல்லை... இன்று இருக்கிறது

ஏன்னா... தானாக கடை திறந்து விட்டால் கொரோனா பரவிடும்...
அரசு சொல்லி திறந்தால் கொரோனா பரவாது...

மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும்...

ஏன்னா... சரியா அஞ்சு மணி ஒரு நிமிடத்தில் இருந்து கொரோனா முடியை விரிச்சுப் போட்டுட்டு ஜிங்கு ஜிங்குன்னு ரோட்டுல நடமாட ஆரம்பிச்சிரும்...

வீட்டுக்குள்ள கணவன் மனைவி ஒன்னா இருக்கலாம்... ஒன்னா சாப்பிடலாம்... ஒன்னா படுக்கலாம்...

ஆனால்... ஆட்டோவில் அருகருகே உட்கார்ந்து போனால் கொரோனா பரவிடும். சோ, ஆளுக்கொரு ஆட்டோ தனித்தனியா ஹையர் பண்ணனும்...

மாவட்டத்தின் எல்லை வரை... ஏன் எல்லைக் கோடு வரை எங்கே வேண்டுமானாலும் போகலாம்... அந்த கோட்டைத் தாண்டி அடுத்த மாவட்டத்துக்குள் நுழைந்து விட்டால் கொரோனா பாய்ந்து வந்து பிடிச்சுக்கும்...

கொரோனாவின் எண்ணிக்கை ஆயிரத்துக்குள் இருக்கும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது...

எண்ணிக்கை பத்தாயிரம் தாண்டி விட்டால் எல்லா தொழிலும் திறந்து கொள்ளலாம்...

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கோடிகள் ஒதுக்கப்படும். ஆனால் பஸ்ஸோ ரயிலோ விடப்படாது.


அனைவரும் மார்தட்டி வீர முழக்கமிடுவோம்...

"எங்கள் இந்தியாவைப் போல ஒரு அற்புத தேசம் இவ்வுலகில் இல்லவே இல்லை..."
Blogger இயக்குவது.