ஈழத்தமிழர் கனடா ஒட்டாவா வீதி விபத்தில் பலி!!
கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே மூன்று வாகனங்கள் மோதியதில், அதில் ஒரு வாகனத்தை செலுத்தி சென்ற சுரேஷ் தம்பிராஜா என்ற தமிழர் இறந்துள்ளார்.
மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார்.
ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.
கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.
ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் எண்பது (1980s) காலப்பகுதி முதல் 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.
2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.
ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், விடுதலைப்புலிகளின் தலைவர் வரையானவர்களின் புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.
ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் உள்வாங்கி இன்றும் அவர்கள் சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக இருக்க சுரேஷின் பங்களிப்பு மிகப்பெரும் காரணமாகும்.
கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo