சொத்துக்களை வாங்கி குவிக்கும் கிராம சேவையாளர்!!
மக்கள் கொரோனாவால் தவித்துவருகின்ற நிலையில் மட்டக்களப்பு கதிரவெளி கிராமசேவையாளர் தயாளன் (GNAO) பிறரின் காணிகளை விற்கும் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெறும் 40000 சம்பளமாக பெறும் குறித்த கிராமசேவையாளருக்கு வாகரை, கயான்கேணி, கதிரவெளி , மருதங்கேணி, வாழைச்சேனை உள்ளங்கலாக 30 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட சொத்துக்களை தம்வசப்படுத்தியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாக கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்ற குறித்த நபர் முஸ்லீம் அமைச்சர் ஒருவரின் சிபாரிசின் பேரில்தான் இப்பதவிக்கு வந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே அவரது சொத்துக்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் திணைக்களம் குறித்த நபரின் சொத்துக்களை பரிசீலனை செய்யவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மேலும் சில கிராம உத்தியோகத்தர்கள் வாகரை பிரதேசத்தில் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அனைத்து கிராமசேவகர்களினதும் பெயர் விபரங்கள் சொத்துக்கள் விரைவில் பட்டியலிடப்படும் என சமூக ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo