மக்களைத் தாக்கிய விசேட அதிரடிப் படையினர்!!
மட்டக்களப்பு வடமுனை ஊத்துச்சேனை மீராண்ட வில் பிரதேசத்தில் மாடு மேய்க்க சென்ற சிலரை விசேட அதிரடிப் படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து தாக்குதலுக்குள்ளானவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நேற்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த திங்கள் கிழமையன்று மேற்படி பிரதேசத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, காவல் இருந்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற விசேட அதிரடிப் படையினர் அவர்களை அழைத்து அப் பிரதேசத்தினை விட்டு விலகி செல்லுமாறு பணித்துள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மரக் கடத்தல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும், தாமும் அவற்றில் ஈடுபடுவதாக தெரிவித்தே அதிரடிப்படையினர் தம்மீது தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோத மரக்கடத்தல் செயற்பாடு அங்கு அதிகமாக காணப்படும் நிலையில், அவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிரடிப் படையினர் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நீண்ட காலமாக பெரும்பாலான கால்நடை பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளின் மேச்சல் தரையாக மீராண்ட வில் பிரதேசத்தை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




