பிறந்த சிசுவை மலசலகூடக் குழிக்குள் போட்ட தாய்!!
யாழ்ப்பாணம் புத்தூரில் பிறந்த சிசுவை வீட்டு மலசலகூடக் குழிக்குள் போட்ட தாயாரை அச்சுவேலிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா வீதியில் இன்று மாலை இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் அப் பெண்ணுக்கு சிசு பிறந்துள்ள நிலையில் சிசுவை வீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத்தின் குழிக்குள் தாயார் போட்டுள்ளார்.
நான்கு நாள்கள் ஆகிய நிலையில் சிசுவின் உடல் அழுகி, துர்நாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அயலவர்களால் இதுதொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், தாயாரையும் கைது செய்தனர்.
சந்தேக நபரான பெண்ணின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில்விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




