மீனவர்களிடம் சிக்கிய பாரிய இராட்சத திருக்கை!

மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் பாரிய இராட்சத திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த திருக்கை மீன் 500 கிலோ எடை கொண்டது எனவும் கூறப்படுகின்றது.
கடல் கொந்தளிப்பு காரணமாக நேற்று மாலை குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் அதனை பிடித்துள்ளனர்.
குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபா வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோன்று, திருக்கையின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அத்திருக்கையினை பார்ப்பதற்கு பெருமளவிலான பொது மக்கள் ஒன்று கூடியதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.