வடமராட்சி கிழக்கில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!!

வடமராட்சி குடத்தனையில் சிறுமிகள் இருவரை பாலியல் ரீதியான துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேர் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை- பொற்பதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பொது இடம் ஒன்றில் 16 மற்றும் 17 வயதுச் சிறுமிகள் இருவர் தமது ஆண் நண்பர்களுடன் உரையாடி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த மூவர், இளைஞர்கள் இருவரையும் அச்சுறுத்தி அவர்களை துரத்திவிட்டு, சிறுமிகள் இருவரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் சிறுமிகள் இருவரையும் கட்டிவைத்துவிட்டு ஊரவர்களை அழைத்து பச்சை மட்டையால் தாக்கியுள்ளனர்.
அத்துடன் சிறுமிகள் இருவரும் தமது நண்பர்களுடன் தகாத உறவில் இருந்ததாக பொலிஸாருக்கு அந்த இளைஞர்கள் மூவரும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சிறுமிகளை மீட்ட பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவர்களை சேர்த்துள்ளனர்.
இதன்போது சட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமிகள் தமக்கு நடந்தவற்றை வாக்குமூலம் வழங்கியுள்ளதை அடுத்து குறித்த இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.
சட்ட மருத்துவ பரிசோதனையை முன்னெடுத்த சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சிறுமிகள் இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறிக்கை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சிறுமிகளை துன்புறுத்திய மூவரும் பருத்தித்துறை பொலிஸாரால் தேடப்படுகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.