தேங்காய் கேக் செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்:

1. பெரிய தேங்காய் (முற்றியது) - 4

2. வெண்ணெய் - 250 கிராம்

3. சீனி - 750 கிராம்

4. ரவை - 100 கிராம்

5. ஏலக்காய் - 10 

செய்முறை:

1. தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.

2. ரவையை லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

3. துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர்த்துக் கிளறி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

4. அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் கலக்கவும்.

5. சீனியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகப் பாகு காய்ச்சி, பாகு பதமாக வந்தவுடன் கலவையைப் பாகில் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

6. அதன் பிறகு அந்தக் கலவையை அகலமான தட்டில் பரப்பி, ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் வெட்டிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Blogger இயக்குவது.