கள் குடித்ததில் ஒருவர் பலி - ஒருவர் அவசர சிகிச்சையில்!!
அரலகங்வில பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் வடித்து பருகிய இரண்டு பேர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சுகவீனமடைந்துள்ள மற்றைய நபர் ஆபத்தான நிலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 42 வயதான கோனார முதியன்சலாகே ஜயசுந்தர என்ற நபரே உயிரிழந்துள்ள நிலையில் அயல் வீட்டை சேர்ந்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் வீட்டுத் தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் பூ ஒன்றை சீவி, அதில் வடிந்த கள்ளை நேற்று முன்தினம் இரவு பருகியுள்ளனர்.
அதன்பின்னர் சுகவீனமடைந்த இருவரையும் பிரதேசவாசிகள் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனியடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மற்றைய நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் மரண விசாரணைகள் நேற்று நடைபெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக அரலகங்வில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




