மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் இந்த கடற்பிராந்தியங்களில் 70-80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த காற்றின் போது குறித்த கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.