ஆம்பன் புயல்: வங்கக்கடலில் மீனவர்கள் செல்ல தடை

தென்கிழக்கு வங்கக்கடலில் 'ஆம்பன்' புயல் நாளை (மே 16) உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 'ஆம்பன்' புயல் நாளை உருவாக வாய்ப்புள்ளது. அது அதே இடத்தில் நீடித்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். 17 வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் புயல் நகர வாய்ப்புள்ளது.

இந்தப் புயலால் தமிழகம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் காற்றின் ஈர்ப்பால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 'ஆம்பன்' புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும்.

காற்று பலமாக வீசும் என்பதால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு மத்திய வங்க கடல், லட்சத்தீவு, குமரி கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.

ராஜ்
Powered by Blogger.