அடுத்தடுத்து 7 படங்கள்: அதிரடி காட்டும் அமேசான்!

அமேசான் நிறுவனம் தனது டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ள முக்கியமான தமிழ், இந்தி படங்களின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.


கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் கடந்த இரு மாத காலமாக மூடப்பட்டுள்ள நிலையில், டிஜிட்டல் தளங்கள் தங்கள் இருப்பை வலுவாக தக்க வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. கோடை விடுமுறை வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்ட படங்கள் எதுவுமே வெளியாகாத நிலையில், இந்த ஊரடங்கை பயன்படுத்தி வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படங்களை நேரடியாக டிஜிட்டல் தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது அமேசான் நிறுவனம். தியேட்டர்கள் எப்போது திறக்கும் என்பது தெரியாத காரணத்தால் பல தயாரிப்பாளர்கள் நேரடியாக டிஜிட்டல் வெளியீட்டுக்கு தயாரானார்கள். அதே சமயம், திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இன்று காலை அமேசான் நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில், தாங்கள் வெளியிடவுள்ள படங்களையும், அவை எப்போது வெளியிடப்படும் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி வெளியாகவுள்ள படங்களின் பட்டியல், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் (தமிழ்) - மே 29, கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் (தமிழ்) - ஜூன் 19, அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடித்த குலாபோ சிதாபோ(இந்தி) - ஜூன் 12, லா (Law) (கன்னடம்) - ஜூன் 26, பிரெஞ்ச் பிரியாணி (கன்னடம்) - ஜூலை 24, வித்யா பாலன் நடித்த சகுந்தலா தேவி(இந்தி) - தேதி அறிவிக்கப்படும், அதிதி ராவ் நடித்த சுஃபியும் சுஜாதாவும்(Sufiyum Sujatayum) (மலையாளம்) - தேதி அறிவிக்கப்படும்.அனைத்து படங்களின் விவரங்கள், போஸ்டர்கள், படத்தின் கேப்ஷங்கள் என தனிதனித்தனியாக இவ்விவரங்களை வெளியிட்டிருக்கிறது அமேசான். இதில் பெரும்பான்மையான படங்கள் நாயகியை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.